Short News

மே 16ல் பிளஸ்-2 தேர்வு முடிவு!

மே 16ல் பிளஸ்-2 தேர்வு முடிவு!

தமிழகம் மற்று புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே 16ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதுஇதில், மே 30ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 23ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. முதல் முறையாக 11ம் வகுப்பு தேர்வு முடிவு இந்த ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர் !

நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர் !

உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவின் தேர்வுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், உச்சநீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வார இறுதியில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதய நோய்களை குறைக்கும் பிஸ்தா!

இதய நோய்களை குறைக்கும் பிஸ்தா!

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டசத்து கொண்டது. இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும். 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் நல்ல அளவு உள்ளது. 
'கோலிசோடா-2' 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்!

'கோலிசோடா-2' 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்!

விஜய் மில்டன் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘கோலி சோடா 2'படம் முதல் பாகத்தில் நடித்தவர் இல்லாமல் படம் முழுவதும் புதுமுகங்களை வைத்து இப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்தின் 'கிளம்பு' என்ற 2வது சிங்கிள் டிராக் படலை இன்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.