Short News

டெல்லியில் ஹெராயின் கடத்தல் மன்னன் கைது!

டெல்லியில் ஹெராயின் கடத்தல் மன்னன் கைது!

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள 4.8 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக சர்வதேச கடத்தல் மன்னன் தான்சானிய நாட்டவர் கைதாகியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச சந்தைகளுக்காக ஹெராயின் அதிகமாக கடத்தப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஊழலை கண்டுபிடிக்கும் புதிய ரோபோ!

ஊழலை கண்டுபிடிக்கும் புதிய ரோபோ!

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்த ஊழலை கண்டுபிடிக்க உதவும் ரோபோவை ஸ்பெயின் மென் பொறியாளர்கள் தயாரித்துள்ளனர். வல்லாடோலித் பல்கலைக்கழக மென் பொறியியல் ஆராய்சியாளர்கள் இதை ரோபோவை கண்டுபிடித்து சாதணை படைத்துள்ளனர். இந்த ரோபோவிடம் எந்த ஊழல்கள் குறித்து கேட்டாலும் கண்டுபிடித்து பதில் சொல்லும். 2000ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடந்த ஊழல் தகவலை இந்த ரோபோ மெமரியல் ஏற்றப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளா: வியக்கும் பாக் ராணுவ தளபதி!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளா: வியக்கும் பாக் ராணுவ தளபதி!

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்ததில்லை என பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர்ஜாவீத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் என நட்பு நாடுகள் என சொல்லப்படும் இவைகளே பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோவதாக கூறி வரும் நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமான ராணுவ தளபதி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் 2 பதவி வகிப்பவர்களுக்கு ஆப்பு!

திமுகவில் 2 பதவி வகிப்பவர்களுக்கு ஆப்பு!

திமுகவில் இரு பதவிகளை வகிப்பவர்கள் உடனடியாக ஒரு பதவியை ராஜினாமா செய்து மாவட்ட செயலாளர்களிடம் உடனடியாக கடிதம் அளிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரிவிட்டுள்ளார். இதையடுத்து, திமுக மாவட்ட செயலாளர்கள் காலியான பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் விவரங்களை வரும் 31ம் தேதிக்குள் திமுக தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.