Short News

அரவக்குறிச்சி அருகே பயங்கர விபத்து: 4 பேர் பலி!

அரவக்குறிச்சி அருகே பயங்கர விபத்து: 4 பேர் பலி!

அரவக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னதாராபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த  4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஸ்டெர்லைட் அமில கசிவு விவகாரம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

ஸ்டெர்லைட் அமில கசிவு விவகாரம்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட அமில கசிவை சரி செய்யும் பணி இரவு பகலாக நடந்துவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 5 லாரிகள் மூலம் ஆசிட் கழிவுகளை கொண்டு செல்லும் பணி இரவு பகலாக நடைபெற்று வருவதாக கூறிய மாவட்ட ஆட்சியர் ஒரிரு நாட்களில் இந்த பணி நிறைவடையும் என்றார்.
பிராந்திய மொழிகளை அழிக்க மத்திய அரசு திட்டம்: கனிமொழி!

பிராந்திய மொழிகளை அழிக்க மத்திய அரசு திட்டம்: கனிமொழி!

மாநிலங்களில் இருக்கும் தொன்மையான பிராந்திய மொழிகளை அழித்துவிட்டு ஒரு மொழியை இந்தியா முழுமைக்கும் திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் வேலை நடைபெற்று வருவதாக கூறினார்.
போராட்டம் நடத்துபவர்களை மிரட்ட வேண்டாம்: ஸ்டாலின் எச்சரிக்கை!

போராட்டம் நடத்துபவர்களை மிரட்ட வேண்டாம்: ஸ்டாலின் எச்சரிக்கை!

சேலத்தில் புதிதாக அமையவிருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான போராடும் பெண்கள், தாய்மார்களை மிரட்ட வேண்டாம் என தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசின் மிரட்டல் தொடரும் பட்சத்தில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி திமுக போராட்டத்தில் குதிக்கும் எனவும் ஸ்டாலின் கூறினார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more