Short News

போர்க்கப்பலை பார்க்க திரண்ட பொதுமக்கள்!

போர்க்கப்பலை பார்க்க திரண்ட பொதுமக்கள்!

சென்னை தீவுக்கடல் அருகே உள்ள துறைமுகத்தில் 5 போர்க்கப்பல்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுடன் பார்வையிட கடைசி நாள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், துறைமுகத்துக்கு அழைத்துச் செல்ல 48 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போர்க்கப்பல்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

தஞ்சையில் கோலாகலத் தேரோட்டம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்து கொண்டிருக்கிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேரோட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

இன்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 407 கன அடியிலிருந்து 315 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 35.27 அடி; நீர் இருப்பு 9.78 டி.எம்.சி. ஆகும். குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து நொடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

வில்லியர்ஸ் சிக்ஸர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ராயுடு, தோனி!

பெங்களூருவில் நேற்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், பெங்களூர் அணியை நசுக்கித் தள்ளியது சென்னை அணி. பெங்களூரின் ஏபி டி வில்லியர்ஸ் வெளுத்த 8 சிக்ஸர்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனாராம் சென்னை கேப்டன் மஹேந்திர சிங் தோனி. ஆனாலும், அசராமல் தோனி 7 சிக்ஸர்களையும், அவருக்குத் துணையாக அம்பதி ராயுடு 8 சிக்ஸர்களையும் பறக்க விட்டு சென்னையை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.