Short News

லவ்வர்ஸ் டேவுக்கு எதிர்ப்பு: நாய்க்கும், கழுதைக்கும் திருமணம்!

லவ்வர்ஸ் டேவுக்கு எதிர்ப்பு: நாய்க்கும், கழுதைக்கும் திருமணம்!

காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இந்து முன்னணி அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாய்க்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
VIP-களுக்காக வருகிறது 'கூகிள் ஃபார் ஜாப்ஸ்' !

VIP-களுக்காக வருகிறது 'கூகிள் ஃபார் ஜாப்ஸ்' !

அமெரிக்கா நாட்டில் கடந்த ஆண்டு வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்களுக்காகச் சிறப்புச் சேவையை அறிமுகம் செய்தது கூகிள். தற்போது இந்தச் சேவையைக் கூகிள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 'வேலைவாய்ப்புகள் இணையதளத்தை இணைத்து கூகிள் தேடுதல் தளத்தின் வாயிலாக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடும் சேவையை 'கூகிள் ஃபார் ஜாப்ஸ்' என்று புதிய வசதி மூலம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
பங்குச் சந்தைகள் சரிவுடனேயே நிறைவு!

பங்குச் சந்தைகள் சரிவுடனேயே நிறைவு!

வார வர்த்தகத்தின் 3ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 115.37 புள்ளிகள் குறைந்து 34,501.30 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 43.80 புள்ளிகள் சரிந்து 10,570.60 புள்ளிகளாக இருந்தது.
பிஸ்தா சாப்பிடறது இவ்வளவு நல்லதா?... உடனே சாப்பிடணுமே...

பிஸ்தா சாப்பிடறது இவ்வளவு நல்லதா?... உடனே சாப்பிடணுமே...

உண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும். 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் நல்ல அளவு உள்ளது.