Short News

தமிழகம் முழுவதும் உஷார் நிலை!

தமிழகம் முழுவதும் உஷார் நிலை!

திமுக தலைவர் கருணாநிதியின்  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க போலீஸாருக்கு அலர்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், தலைவர் சிலைகள் மற்றும் தலைவர்கள் இல்லங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
அமேசான் எக்ஹோ ஸ்பிக்கர் விலை குறைப்பு!

அமேசான் எக்ஹோ ஸ்பிக்கர் விலை குறைப்பு!

அமேசான் நிறுவனத்தின் எக்ஹோ ஸ்மார்ட் ஸ்பிக்கர்ஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி உடனான போட்டியை சமாளிக்கும் விதமாக இதன்விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 ஆயிரத்தி 999 ரூபாயாக இருந்த அமேசான் எக்ஹோ ஸ்பிக்கரின் விலை 7 ஆயிரத்தி 999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தானமாக வழங்கப்பட்ட சோம்நாத் உடல்!

தானமாக வழங்கப்பட்ட சோம்நாத் உடல்!

நேற்று காலமான மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, தன் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, அவருடைய உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரியிடம் தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக, சோம்நாத்தின் உடல் கொல்கத்தா உயர்நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சீனாவில் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா?

சீனாவில் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா?

சீனாவில் பல நாட்டு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை மிண்ட்டிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் இந்திய ரூபாய் நோட்டுகளும் சீனாவில் அச்சடிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்த செய்தி உண்மையானால் இது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாகும். இந்திய ரூபாய் நோட்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் அச்சடிக்கப்படுகிறதா? என்று பதிவிட்டுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more