Short News

ஜெ. மரண விசாரணை கமிஷன்: டாக்டர் ஷில்பா ஆஜர்!

ஜெ. மரண விசாரணை கமிஷன்: டாக்டர் ஷில்பா ஆஜர்!

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக தமிழக அரசின் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஜெ.க்கு சிகிச்சை அளித்த சிறப்பு அப்பல்லோ டாக்டர்கள் 2 பேர் இன்று ஆஜராகினர். இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவகுமார் ர் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து, இன்று சிறப்பு மருத்துவர் ஷில்பா, மற்றும் செவிலியர் ஹெலனா ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.
தெற்காசியாவிலேயே மிக குறைந்த எடையில் பிறந்த குழந்தை!

தெற்காசியாவிலேயே மிக குறைந்த எடையில் பிறந்த குழந்தை!

ஒடிசாவைச் சேர்ந்த நித்திகா மற்றும் சவுரப் என்ற தம்பதிக்கு தெற்காசியாவிலேயே மிக குறைந்த எடை குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 375 கிராம் எடையுடன் பிறந்துள்ளது. இந்த குழந்தை 0.5 சதவிகிதமே உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் இந்திய அளவில் " #SmallestBabyBorn " என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.  
எந்தவகை மீன்களை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது?

எந்தவகை மீன்களை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது?

மீன் என்பது குழந்தையின் மூளை மற்றும் பார்வைத்திறனை அதிகரிக்க கூடிய அத்தியாவசிய சத்துக்களை கொண்ட அற்புத உணவாகும். ஆனால் ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு ஒருபோதும் மீன் கொடுக்கக்கூடாது. ஆறு மாதம் ஆன குழந்தைக்கு கூட அவர்களுக்கு அலர்ஜி ஏற்ப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். பாதரசம் அதிகம் உள்ள மீன்களையோ, பதப்படுத்தப்பட்ட மீன்களையோ குழந்தைக்கு ஒருபோதும் கொடுத்துவிடாதீர்கள்.

நரகாசூரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

நரகாசூரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

துருவங்கள் பதினாறு வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா சரண், இந்திரஜித், சந்தீப் கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரான் ஈதன் ரோகன் இசையமைத்துள்ளார். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more