Short News

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் ஆஜர்!

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் ஆஜர்!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முன்னிலையில் அப்போலோ மருத்துவர் பத்மா இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்த செவிலியர் மகேஷ்வரியும் ஆணையத்தின் முன்னிலையில் ஆஜாராகி உள்ளனர்.
கில்மா யாஷிகா ஏன் வெளியேறவில்லை? கடுப்பான ரசிகர்கள்!

கில்மா யாஷிகா ஏன் வெளியேறவில்லை? கடுப்பான ரசிகர்கள்!

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை யாஷிகாவை வெளியேற்ற பார்வையாளர்கள் விரும்பினார்கள். இதனால் பலரும் பேஸ்புக், ட்வீட்டரில் யாஷிகாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தனர். சிலர் யாஷிகா மீது உள்ள கோபத்தை வாக்குகள் மூலம் பார்வையாளர்கள் காண்பித்தனர். ஆனால் நேற்றைய எவிக்சனில் நித்யாவை பிக்பாஸ் (கமல்) வெளியேற்றிவிட்டார். இதனால் மிகவும் பார்வையாளர்கள் நொந்து போயுள்ளனர்
கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடல் அலைகள் சுமார் 4.5 மீட்டர் வரை எழும்பும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ஒரு படகு கவிழ்ந்தது; ஆனாலும் அதிலிருந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
பழிக்குப் பழி: 300 முதலைகள் வெட்டிச் சாய்ப்பு!

பழிக்குப் பழி: 300 முதலைகள் வெட்டிச் சாய்ப்பு!

தம் உறவினரை ஒரு முதலை கடித்துக் குதறிக் கொன்றதால், அதற்குப் பழிவாங்குவதற்காக சுமார் 300 முதலைகளை வெட்டிச் சாய்த்துள்ளது ஒரு கும்பல். இந்தோனேசியாவின் பப்புவா என்ற பகுதியில் உள்ள ஒரு முதலைப் பண்ணையில்தான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்த முதலைப் பண்ணையை அகற்ற அப்பகுதி மக்கள் ஏற்கனவே தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more