Short News

ஜெ. மரணம்: குறுக்கு விசாரணை தொடக்கம்!

ஜெ. மரணம்: குறுக்கு விசாரணை தொடக்கம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில், 7 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணை தொடங்கியது. இதில் கிருஷ்ணபிரியா, விவேக், அரசு மருத்துவர்கள் சுதா ஷேசய்யன், சுவாமிநாதன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கட்ரமணன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், சமையலர் ராஜம்மாளிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்த விசாரணையில் அப்பலோ மருத்துவர் சத்தியபாமா விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

இன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்! 
படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சுருதிஹாசன் படபிடிப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது வித்யூத் ஜம்வாலுடன் இணைந்து சுருதி நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த இந்த படத்தின் நாயகன் துப்பாக்கி பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அனைத்து மொழி படங்களிலும் நடிக்க சுருதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.