Short News

புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது!

புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது!

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது செய்யப்படுவார் என்று அருப்புக்கோட்டை ஏடிஎஸ்பி மதி தெரிவித்துள்ளார். விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் அங்கேயே 2 மணி நேரம் காத்திருந்து திரும்பி விட்டனர்.
'கோலிசோடா-2' 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்!

'கோலிசோடா-2' 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்!

விஜய் மில்டன் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘கோலி சோடா 2'படம் முதல் பாகத்தில் நடித்தவர் இல்லாமல் படம் முழுவதும் புதுமுகங்களை வைத்து இப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்தின் 'கிளம்பு' என்ற 2வது சிங்கிள் டிராக் படலை இன்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டான்சிலை அடியோடு விரட்டும் அற்புத சூப்... எப்படி செய்வது?...

டான்சிலை அடியோடு விரட்டும் அற்புத சூப்... எப்படி செய்வது?...

தொண்டை அழற்ச்சி (டான்சிலிட்டிஸ்) நோய் என்பது நமது அடி நாக்கில் அதாவது தொண்டையின் அருகே உள்ள இரண்டு சிறிய திசு பகுதியானது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்படுவதே ஆகும். நீங்கள் தொண்டை அழற்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு காரணம் ஃக்ரூப் எ ஸ்ட்ரெப்டோகாகஸ் பாக்டீரியா தொற்றாக இருக்கலாம் இல்லையெனில் வைரஸ் தொற்றாக இருக்கலாம்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.