Short News

விபத்தில் சிக்கிய ஆயுத கார்: போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்கிய ஆயுத கார்: போலீஸ் விசாரணை!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நேற்று முன்தினம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் விபத்துக்குள்ளான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காரில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் சிக்கியுள்ளன. இந்நிலையில் கைபற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

என்னை விட பெரிய செல்வந்தர்கள் இருந்தாலும் நான் தான் அதிகமான வரியை செலுத்துவதாக பிரபல தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் பில் கேட்சை அமேசான் நிறுவத்தின் சிஇஓவின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ஐ.எஸ்.தீவிரவாத பெண்ணுக்கு தூக்கு!

துருக்கி ஐ.எஸ்.தீவிரவாத பெண்ணுக்கு தூக்கு!

ஈராக்கில் அரசுப் படையினரிடம் சரண் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் சரணடைந்த ஐ.எஸ் தீவிரவாத பெண்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொரு துருக்கி நாட்டு பெண்ணுக்கு தூக்கு தண்டனையும் விதித்து இன்று  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு நீதிமன்ற செய்தி தொடர்பாளர் அப்துல் சத்தார்  தெரிவித்தார்.
தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டவுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்களுக்கு போலீஸார் இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குழந்தை என்றும் பாராமல் ஹாசினியை கொடூரமாக கொன்ற குற்றத்துக்காக இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்கின்றனர். தஷ்வந்தை நீதிமன்றத வளாகத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.