Short News

ஸ்கீம்க்கு அர்த்தம் என்ன?  கொந்தளித்த ஜெயக்குமார்!

ஸ்கீம்க்கு அர்த்தம் என்ன? கொந்தளித்த ஜெயக்குமார்!

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் முடிவை தான், உச்சநீதிமன்றம் மத்திய அரசை செயல்படுத்த கூறியிருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதில், ஸ்கீம் குறித்து காவிரி தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அர்த்தம் தெரியவில்லை எனில் மத்திய அரசு, டிக்ஸ்னரி பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 
ஓவியா 'ஜகா' வாங்கிய படத்தில் ஆத்மிகா!

ஓவியா 'ஜகா' வாங்கிய படத்தில் ஆத்மிகா!

டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் ஓவியா என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து ஓவியா 'ஜகா' வாங்கி விட்டார். இதையடுத்து, மீசைய முறுக்கு படத்தின் கதாநாயகியாக தற்போது ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சிபிசிஐடி போலீஸ் சீல் வைத்தது. அவரது வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது
எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

செய்தியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது எஸ்வி சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், எஸ்வி சேகர் 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.