Short News

சற்று நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு!

சற்று நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு!

தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் வருகை புரிந்துள்ளனர். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு தலைமை வழக்கறிஞர் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 2:எலிமினேஷன் லிஸ்டில் உள்ள போட்டியாளர்கள்

பிக்பாஸ் 2:எலிமினேஷன் லிஸ்டில் உள்ள போட்டியாளர்கள்

பிக்பாஸ் 2 துவங்கி இரண்டு நாள் தான் ஆகியுள்ளது. முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் போட்டியாளர்களுக்கு அது தெரியாது என்பதால் நாமினேஷன் வழக்கம் போலவே நடத்தப்பட்டது. அதில் 4 பெயர்கள் வெளியேற்றப்படுபவர்கள் பட்டியலில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. பாடகர் ஆனந்த் வைத்தியநாதன், ரித்விகா, நித்யா பாலாஜி பெயர் இடம் பெற்றுள்ளது.
சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு திட்டமிடும் கமல்ஹாசன்!

சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு திட்டமிடும் கமல்ஹாசன்!

சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக சபாஷ் நாயுடு படத்தை முடிக்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளித்திரைக்கு வர தயாராக இருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பேருந்தில் இந்தியில் பெயர் பலகை!

தமிழக அரசு பேருந்தில் இந்தியில் பெயர் பலகை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பேருந்து நிலையத்தில் மார்க்கெட் செல்லும் பேருந்துக்கு ஞாயிறுதோறும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. பெருந்துறை மார்க்கெட்டுக்கு செல்லும் 17-ஆம் எண் பேருந்தில் ஞாயிறுதோறும் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. வட மாநிலத்தவர் அதிகம் இங்கு உள்ளதால் இந்தி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more