Short News

எனக்கு சுகர் இருக்கு..விட்டுடுங்க- ரவுடி பினு கதறல்!
<iframe width="820" height="461" src="https://www.youtube.com/embed/YSJQAKSyMZ0" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

எனக்கு சுகர் இருக்கு..விட்டுடுங்க- ரவுடி பினு கதறல்!

சென்னை அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன் இன்று சரணடைந்த பிரபல ரவுடி பினு, "50 வயசாச்சு, நான் பெரிய ரவுடி இல்லை,திருந்தி வாழ ஆசைப்பட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தேன், நான் கரூரில் தலைமறைவாக இருந்தது என் தம்பிக்கு மட்டுமே தெரியும், என் 50வது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என என் தம்பி வலியுறுத்தியதால் நான் சென்னை வந்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்
கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று தொடங்கியுள்ளது. கலாமின் வீட்டிற்கு இன்று காலை சென்ற கமல், அங்கு கலாமின் உறவினர்களுடன் உரையாடினார். பின்னர் கலாமின் வீட்டிலேயே கமல் தன் காலை உணவையும் சாப்பிட்டார்.
கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

இன்று தன் அரசியல் பயணத்தை அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவர் கலாம் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களை சந்திக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-ஜெயம்; ரிஷபம்-ஏமாற்றம்; மிதுனம்-இரக்கம்; கடகம்-சாந்தம்; சிம்மம்-ஆதாயம்; கன்னி-நிறைவு; துலாம்-வரவு; விருச்சிகம்-சுகம்; தனுசு-அமைதி; மகரம்-பேராசை; கும்பம்-போட்டி; மீனம்-நன்மை... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்.