Short News

கோயில் அருகே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்க சிஎம் உத்தரவு!

கோயில் அருகே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்க சிஎம் உத்தரவு!

தமிழகத்தில் பெரிய கோவில் வளாகங்களின் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும் என  அவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற இந்தியா முதலீடு!

பிரிட்டன் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற இந்தியா முதலீடு!

பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி,அந்நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 1 பில்லியன் பவுண்டுகள் இந்தியா முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் மத்தியில் தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பலபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில், பிரிட்டன் அரசு புதிய இந்தியா-யுகே வர்த்தகக் கூட்டணியை அறிவித்துள்ளது.
தோனி விளையாடுவது சந்தேகம்!

தோனி விளையாடுவது சந்தேகம்!

இன்றைய 17வது டி20 லீக் போட்டியில் சென்னை- ராஜஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் சென்னை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இதில் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என சொல்லப்படுகிறது. மேலும், காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாடத வாட்சன், தற்போது நல்ல பார்மில் இருப்பதால், இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார். ரெய்னாவும் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.
உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

ஆதார் விபரங்களின் மீது மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் அதில்தான் இருக்கிறது. இதில், ஆதார் எண்ணை நாம் எங்கெல்லாம் ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும். இதற்காக ஆதார் ஆணையமும் ஒரு சிறப்பான சேவை அறிமுகச் செய்துள்ளது, அதுதான் ஆதார் உபயோகித்த வரலாறு (Aadhaar Authentication History).