Short News

பயிற்சியின்போது மாணவி பலி: பயிற்சியாளர் மீது நடவடிக்கை உறுதி!

பயிற்சியின்போது மாணவி பலி: பயிற்சியாளர் மீது நடவடிக்கை உறுதி!

கோவை அருகே நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மாணவி இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் உறுதியளித்துள்ளார்
SPK நிறுவனத்தில் 4ஆவது நாளாக ஐ.டி. ரெய்டு!

SPK நிறுவனத்தில் 4ஆவது நாளாக ஐ.டி. ரெய்டு!

'ஆபரேஷன் பார்க்கிங் மனி' என்ற பெயரில் சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த திங்கள்கிழமை வருமான வரி சோதனை தொடங்கியது. பல கோடி ரூபாய் மற்றும் தங்கம் பறிமுதலாகியுள்ள நிலையில், 4ஆவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று மேலும் 2 முக்கிய அதிகாரிகள் சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.
பழனியில் இளம் ஆசிரியை கழுத்தறுத்துப் படுகொலை!

பழனியில் இளம் ஆசிரியை கழுத்தறுத்துப் படுகொலை!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பவித்ராவை அவருடைய உறவினரான மாயவன் என்ற வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். கொலையாளி மாயவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடலிலிருந்து கிடைக்கும் 50% ஆக்ஸிஜன்!

கடலிலிருந்து கிடைக்கும் 50% ஆக்ஸிஜன்!

உலகத்தில் உற்பத்தியாகும் பாதி அளவு ஆக்ஸிஜன் கடலில் இருந்து தான் வருகிறதாம். நமக்குத் தேவையான முழு ஆக்ஸிஜனும் மரத்தில் இருந்து கிடைப்பதில்லை. கடலில் சிறிய வகை நீர்வாழ் தாவரங்கள் நிறைய இருக்கின்றன. இவைதான் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உட்கொண்டு நாம் உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வெளிபடுத்துகின்றன.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more