Short News

குழந்தைகள் விபத்தில் இறந்தால் நிதியுதவி: தமிழக அரசு!

குழந்தைகள் விபத்தில் இறந்தால் நிதியுதவி: தமிழக அரசு!

விபத்துக்களால் உயிரிழக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தமிழக அரசு சார்பில் இழப்பீடு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை என்பது கட்டிட விபத்து, சாலை விபத்து உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும் என கூறப்படுகிறது. நீண்ட விவாதத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

நடிகர் விஜய் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விசுவாசம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அமெரிக்காவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

நேபாளத்தில் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என உருவாகியுள்ளது. இதில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்- சென்டர் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றது. தற்போது, இந்த கூட்டணி ஒன்றாக இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு கடிதம் எழுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அந்த 6 வயது சிறுமி. புளூட்டோவை மீண்டும் கோள் என்று அறிவியுங்கள் என அந்த சிறுமி நாசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நாசா நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய சுவாரஸ்யங்களை கொண்டிருப்பதுதான் புளூட்டோ என கூறியுள்ளது.