Short News

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல்? ஐகோர்ட் கேள்வி

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல்? ஐகோர்ட் கேள்வி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது த தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் என்ன சிக்கல்? ஏன் காலதாமதம்? என்பது குறித்த விரிவான அறிக்கையை ஜூன் 14ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணம் உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளை அதிகரிக்க செய்கிறது. இதற்கு இந்தியா முதல் மாலத்தீவுவரை உதாரண சின்னங்களாக இருக்கின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு மாலத்தீவு அதிபருக்கு ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி என்பதை புவனேஷ்வர்குமார் வெளிப்படுத்தியுள்ளார். வேகத்தை குறைத்து பந்துகளை வீசும்போது பேட்ஸ்மேன் ரன் குவிக்க திணறுவார். மேலும் அப்போது சரியான நீளத்தில் வீசப்படும் பந்துகள் அவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும். தொடர்ந்து இதனை கடைபிடிக்கும்போது விக்கெட்கள் சரிய வாய்ப்பு உள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஜியோ வந்த பிறகு சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க அதிரடி செலுகைகளை அறிவித்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளன.