Short News

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ் மீது தாக்குதல்!

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ் மீது தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் பூனம் யாதவ் மீது நிலத்தகராறு காரணமாக, வாரணாசி வந்த அவர் மீது மர்ம கும்பல் சிலர் செங்கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். வாரணாசியில் உள்ள அவரது உறவினர்களை பார்ப்பதற்காக வந்திருந்த போது அங்கிருந்த சிலர் அவர் மீது செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணத்தின் கதைகள்: பலாவான் தீவு!

பயணத்தின் கதைகள்: பலாவான் தீவு!

பில்லிபைன்ஸ் நாட்டில் இருக்கும் பலாவான் தீவு தெளிவான நீர் மற்றும் உறுதியான மலைகளால் ஆனது. மனிதர்கள் அதிகம் செல்லாத தீவுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கு சின்ன சின்ன மலைகள் அதிகம் காணப்படுகின்றன. புகைப்பட நயம் உள்ளவர்களுக்கு இந்த தீவு சொர்க பூமியாக இருக்கும், காரணம் இயற்கையின் வண்ணத்தை தன்னுள் தாங்கி இருக்கிறது பலாவான்.
உலகின் அதிவேக ஜெட் எஞ்சின் கப்பல்!

உலகின் அதிவேக ஜெட் எஞ்சின் கப்பல்!

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று, போயிங் 747 விமானத்தின் எஞ்சின் பொருத்தப்பட்ட உலகின் அதிவேக படகை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படகு போப் ஆண்டவர் பெயரில் பிரான்சிஸ்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படகு அர்ஜென்டினா மற்றும் உருகுவே இடையில் சேவையில் உள்ளது. இந்த படகில் 1,000 பயணிகள், 150 கார்களுடன் மணிக்கு 107.4 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
வரி உயர்வு காரணமாக கார்களின் விலை உயரும் அபாயம்!

வரி உயர்வு காரணமாக கார்களின் விலை உயரும் அபாயம்!

மே மாதம் முதல் புதிய டீசல் காருக்கான வரி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் காரின் விலை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. நீங்கள் டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக காரை வாங்கி விடுங்கள். இல்லையென்றால் அடுத்த மாதம் முதல் புதிய கார்களை பதிவு செய்வதற்கான சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.