Short News

ரஜினியை செருப்பால் அடித்த மாதிரி கேள்வி கேட்ட பாரதிராஜா!

ரஜினியை செருப்பால் அடித்த மாதிரி கேள்வி கேட்ட பாரதிராஜா!

காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என்று ரஜினி கூறுவது கண்டிக்கத்தக்கது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும், குடிநீருக்கு சேர்த்து தான் தமிழர்கள் ரத்தம் சிந்தினர் என்று அவர் கூறியுள்ளார், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராட்டம் செய்தீர்களா? என்று ரஜினிக்கு பாரதிராஜா கேள்வி கேட்டுள்ளார்.
மதுரை: மீண்டும் திறக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம்!

மதுரை: மீண்டும் திறக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம்!

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீவிபத்தில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சேதமடைந்து, பின்னர் பூட்டி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அது பக்தர்கள் பார்வையிடுவதற்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா கடந்த ஒருசில நாட்களாகக் களைகட்டி வரும் நிலையில், இந்தத் தகவலால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எஸ்.வி. சேகர் எந்த நேரத்திலும் கைது?

எஸ்.வி. சேகர் எந்த நேரத்திலும் கைது?

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இவ்விவகாரத்தில் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள எஸ்.வி. சேகர் முன்ஜாமீன் பெற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 9 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-32; மதுரை-31; கோயம்புத்தூர்-26; திருச்சி-29; திருநெல்வேலி-30; திண்டுக்கல்-29; ஈரோடு-30; சேலம்-27; சிவகாசி-30; தஞ்சாவூர்-29; தூத்துக்குடி-30; திருப்பூர்-27; வேலூர்-31; ஊட்டி-18; கொடைக்கானல்-19; ஏற்காடு-24; ஏலகிரி-29; வேடந்தாங்கல்-32.