Short News

மீனவர்களின் வாழ்வில் விளையாட வேண்டாம்: ஜெயக்குமார்!!

மீனவர்களின் வாழ்வில் விளையாட வேண்டாம்: ஜெயக்குமார்!!

அதிகாரிகளின் ஆய்வில் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வீண் வதந்தி பரப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாட வேண்டாம் எனக் கூறிய ஜெயக்குனார் மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலை.யில் ஆய்வு செய்யலாம் என்றார்.
ரயிலில் சாகசம் என நினைத்து தனக்கு தானே வெட்டு வைத்த இளைஞர்!

ரயிலில் சாகசம் என நினைத்து தனக்கு தானே வெட்டு வைத்த இளைஞர்!

பெங்களூரில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சாகசம் செய்வதாக நினைத்து ஒடும் ரயிலில் தொங்கியபடி பயணித்து போது கிழே விழுந்தார். அவர் கை நழுவி கீழே விழுந்து அடிபடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த வாலிபர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் செய்த செய்கையை யாரும் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன்- மிஷ்கின் பகீர்!

மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன்- மிஷ்கின் பகீர்!

இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான 'பேரன்பு' படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின்" மம்மூட்டி ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன், அவர் பெண்ணாக இருந்தால் பாலியல் பலாத்காரம் செய்திருப்பேன், ஏனென்றால் இந்த படத்தில் மம்மூட்டி வெளிப்படுத்திய உணர்வுகள் அற்புதமானது" என்றார்.
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் கடும் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 217.86 புள்ளிகள் சரிந்து 36,323.77 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 82.05 புள்ளிகள் குறைந்து 10,936.85 புள்ளிகளாக இருந்தது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more