Short News

ஈபிஎஸ்-உடன் டீ சாப்பிட்டதால் என்ன ஆகுமோ? ஸ்டாலின் நக்கல்!

ஈபிஎஸ்-உடன் டீ சாப்பிட்டதால் என்ன ஆகுமோ? ஸ்டாலின் நக்கல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி- மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து திருவள்ளுர் மாவட்ட கட்சி கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-உடன் காபி சாப்பிட்டேன், அவரது பதவி போனது நேற்று தற்போதைய முதல்வர் ஈபிஎஸ்-உடன் டீ சாப்பிட்டேன் என்ன ஆகுமோ? என்று தெரியவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை அணி முதியோர் இல்லமா?  பதிலடி!

சென்னை அணி முதியோர் இல்லமா? பதிலடி!

நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த டி20லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றிபெற்றது. இதில் தோனி 7 சிக்ஸர்கள் அடித்து நேற்று வானவேடிக்கை காட்டினார். இதை வைத்து இணையத்தில் நிறைய மீம்ஸ் வைரலாகி வருகிறது. இதில் ஒருவர் சென்னை அணியில் வயதான வீரர்கள் இருப்பதை வைத்து முதியோர் இல்லமா? என்று கேள்விக்கு மீம் போட்டு பெங்களூரு ரசிகர்களை கலாய்த்து இருக்கிறார்.
இன்றைய (ஏப்ரல் 26) கரன்சி நிலவரம்!

இன்றைய (ஏப்ரல் 26) கரன்சி நிலவரம்!

அமெரிக்கா(டாலர்)-ரூ.66.9177, ஐரோப்பா(யூரோ) -ரூ.81.3052., பிரிட்டன்(பவுண்டு)- ரூ.93.1005 ஆஸ்திரேலியா(டாலர்) -ரூ.50.525, சிங்கப்பூர்(டாலர்)-ரூ.50.3649, ஹாங்காங்(டாலர்)- ரூ.8.518, மலேசியா(ரிங்கட்)-ரூ.17.093பக்ரைன்(தினார்) 177.128, குவைத்(தினார்)-ரூ.221.9372, ஓமன்(ரியால்)-ரூ.173.8339,கத்தார்(ரியால்)-ரூ.18.3395 சவுதி(ரியால்)-ரூ.17.8031, தாய்லாந்து(பாத்)- ரூ.2.1196.,
ஸ்டைலை மாற்றிய சன் பிக்சர்ஸ்!

ஸ்டைலை மாற்றிய சன் பிக்சர்ஸ்!

ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது இரண்டு மெகா புராஜெக்டுகளுடன் களத்தில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். அதில் ஒன்று ரஜினியின் புதிய படம். அடுத்து விஜய் நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம். முன்பு சன் பிக்சர்ஸ் படங்கள் என்றாலே, இப்படித்தான் இருக்கும் என ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் அந்த ஸ்டைலை சன் பிக்சர்ஸ் தற்போது மாற்றிக் கொண்டுள்ளது.