Short News

பிப்.16ல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்!

பிப்.16ல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மின்வாரியத் தொழிற்சங்கக் கூட்டுக்குழு அறிவித்தது. தற்போது நாளை நடைபெறவிருந்த மின்சார வாரிய ஊழியர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கது. இதனால் பிப்ரவரி 16 ஆம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி: சென்னையில் சரத் உண்ணாவிரதம்!

காவிரி: சென்னையில் சரத் உண்ணாவிரதம்!

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் அவருடன் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-33; மதுரை-33; கோயம்புத்தூர்-31; திருச்சி-32; திருநெல்வேலி-31; திண்டுக்கல்-32; ஈரோடு-32; சேலம்-32; சிவகாசி-30; தஞ்சாவூர்-33; தூத்துக்குடி-32; திருப்பூர்-29; வேலூர்-32; ஊட்டி-19; கொடைக்கானல்-20; ஏற்காடு-26; ஏலகிரி-31; வேடந்தாங்கல்-33.
சிறு சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

சிறு சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் 3ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் சற்று இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 17.38 புள்ளிகள் சரிந்து 34,599.26 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 9.4 புள்ளிகள் குறைந்து 10,604.95 புள்ளிகளாக இருந்தது.