Short News

கிள்ளியூர் EX எம்.எல்.ஏ. மரணம்!

கிள்ளியூர் EX எம்.எல்.ஏ. மரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் உடல் நலக்குறைவால் காலமானார்.காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான ஜான் ஜேக்கப் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். இவர் 2004 மற்றும் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாக கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று தொடங்கியுள்ளது. கலாமின் வீட்டிற்கு இன்று காலை சென்ற கமல், அங்கு கலாமின் உறவினர்களுடன் உரையாடினார். பின்னர் கலாமின் வீட்டிலேயே கமல் தன் காலை உணவையும் சாப்பிட்டார்.
கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

இன்று தன் அரசியல் பயணத்தை அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவர் கலாம் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களை சந்திக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-ஜெயம்; ரிஷபம்-ஏமாற்றம்; மிதுனம்-இரக்கம்; கடகம்-சாந்தம்; சிம்மம்-ஆதாயம்; கன்னி-நிறைவு; துலாம்-வரவு; விருச்சிகம்-சுகம்; தனுசு-அமைதி; மகரம்-பேராசை; கும்பம்-போட்டி; மீனம்-நன்மை... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்.