Short News

கன்னியாகுமரியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது

கன்னியாகுமரியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய தந்தையை போலீஸார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேச்சிப்பாறை அருகே ஜீரோ பாயிண்ட் பகுதியில் மூன்று வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை ஐயப்பனை கடையாலுமூடு போலீஸார் கைது செய்துள்ளனர்.

வைரலாகி வரும் அஜித்தின் 'ஸ்லிம்' போட்டோ!

வைரலாகி வரும் அஜித்தின் 'ஸ்லிம்' போட்டோ!

சிவா இயக்கத்தில் அஜித், 4வது முறையாக 'விசுவாசம்' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடை குறைத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஸ்லிம்மாக இருக்கும் தோற்றத்துடன் அவ்வப்போது, அவருடன் ரசிகர்கள் போட்டோ எடுத்து வெளியிடுகின்றனர். இதில், ரசிகர் ஒருவர் 'விசுவாசம்' பட கெட்டப்பில் அவருடன் எடுத்த போட்டோ இன்று வைரலாகி வருகிறது.
குலுங்கிய மெக்சிகோ!

குலுங்கிய மெக்சிகோ!

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கபம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித செய்தியும் வெளியாகவில்லை. இருப்பினும் பெரும்பாலான மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான் பேரம் பேசியது இல்லை - ஓவியா காரசார பதில்!

நான் பேரம் பேசியது இல்லை - ஓவியா காரசார பதில்!

மார்க்கெட்டே இல்லாமல் இருந்த ஓவியாவிற்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பின் நம்பர் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். இதைப்பார்த்த டாப் நடிகைகள் பொறாமையின் உச்சத்திற்கே சென்றனர். இந்நிலையில், சம்பளத்தை பல கோடி உயர்த்தியதாக வெளியான செய்திக்கு பதில் அளித்த ஓவியா, "நான் தயாரிப்பாளரிடமும் இவ்வளவு அவ்வளவு என்று பேரம் பேசியது இல்லை நல்ல கதைகளைத் தான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.