Short News

ஆம்பூரில் கண் மருத்துவமனையில் தீ விபத்து!

ஆம்பூரில் கண் மருத்துவமனையில் தீ விபத்து!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வாசன் கண் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பல லட்சமம் மதிப்புள்ள மருத்துவமனையின் மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியால் ஈடுபட்டு வருகின்றனர்.
'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். மேலும், என் கட்சியின் கட்டமைப்பு என்னுடன் முடிவது அல்ல, குறைந்தது 3 அல்லது 4 தலைமுறை தாங்கும் என பேசியுள்ளார். மேலும், என்னுடைய கட்சி பேச்சை குறைத்து செயலில் இறங்கும் எனவும் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். 
கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவில் ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதை கவுரவமாக கருதுகிறேன் என்று கமலின் 'மக்கள் நீதி மய்ய' அரசியல் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜனநாயகத்தை கமல் காப்பார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.