Short News

சிவராத்திரி அன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தீவிபத்து... பக்தர்கள் வேதனை

சிவராத்திரி அன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தீவிபத்து... பக்தர்கள் வேதனை

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி சன்னதியில் அதன் அலங்கார உடையில் தீப்பிடித்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இன்று சிவராத்திரி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவாலயங்களில் 4 கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதையொட்டி சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தற்போது தீவிபத்து நடைபெற்றது.

அழகு முகம் ஸ்ரீதேவி மறைந்துவிட்டது- வைரமுத்து இரங்கல்!

அழகு முகம் ஸ்ரீதேவி மறைந்துவிட்டது- வைரமுத்து இரங்கல்!

கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் ஸ்ரீதேவியின் முகம், அந்த முகம் மறைந்துவிட்டது என்று கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,தெற்கில் உதித்து வடக்கை வெற்றிக்கொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே இன்று விழுந்துவிட்டது. நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
எலிபண்டா தீவுக்கு மின்சார இணைப்பு- மோடி பெருமிதம்!

எலிபண்டா தீவுக்கு மின்சார இணைப்பு- மோடி பெருமிதம்!

அகில இந்திய வானொலி மூலமாக 41வது முறையாக 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் பிரமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இதில், மும்பை துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபண்டா தீவுகளில் உள்ள மூன்று கிராமங்களுக்கு மத்திய அரசு சார்பில் இறுதியாக மின்சார இணைப்புகள் வழங்கியுள்ளது. இதை சாத்தியமாக்கிய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.
அமெரிக்கா சோதனை: வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா சோதனை: வடகொரியா எச்சரிக்கை!

வடகொரியா மீது சர்வதேச நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ள சூழ்நிலையில் சரக்கு கப்பல்களை சோதனையிட அமெரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சரக்குக் கப்பல்களை இடைமறித்து சோதனையிடும் செயலை போராகவே கருதுவோம் என வடகொரியா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.