Short News

வங்கக்கடலில் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு பலத்த தரை காற்று!

வங்கக்கடலில் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு பலத்த தரை காற்று!

வங்கக்கடலில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கத்தி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

கத்தி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தில் இன்று காலை கத்தி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஜமால் முகமதுவை போலீஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டார். கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தொழிலதிபர் ஜமால் முகமது கத்தி முனையில் இன்று காலை கடத்தப்பட்டார். கடத்தப்பட்டது யார் என்று குறித்த தகவலை போலீஸார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
ஸ்ரீரெட்டியுடன் உறவு: லாரன்ஸின் அந்தர்பல்டி பதில்!

ஸ்ரீரெட்டியுடன் உறவு: லாரன்ஸின் அந்தர்பல்டி பதில்!

தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதாக இயக்குனர், நடிகர்கள் மீது அந்தரங்க புகார்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இதில், நடிகர் லாரன்ஸ் தனது வயிற்றை காட்ட சொல்லி பின்னர், தன்னுடன் உறவு கொண்டார் என பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு பதிலளித்து என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை" என்றார்.
சூறைக்காற்று: அடியோடு சாய்ந்த நூற்றுக்கணக்கான தென்னைமரங்கள்!

சூறைக்காற்று: அடியோடு சாய்ந்த நூற்றுக்கணக்கான தென்னைமரங்கள்!

ராஜபாளையம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சூறைக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றால் பலத்த காற்றால் நூற்றுக்கணக்கான தென்னைமரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனார். மேலும், ஏக்கருக்கு ரூ.15,000 தமிழக அரசு இழப்பீடு தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more