Short News

EX துணைவேந்தர் கணபதிக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஜெயில் தேவையா?

EX துணைவேந்தர் கணபதிக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஜெயில் தேவையா?

லஞ்ச புகாரில் சிக்கியுள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நேற்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில்,அவருக்கு முதல் வகுப்பு சிறை வசதிகள் செய்துதர கோவை ஆட்சியர் பரிந்துரைக்குமாறு ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நைஜீரியா சர்ச்சில் துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி!

நைஜீரியா சர்ச்சில் துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி!

நைஜீரியாவின் குவெர் கிழக்கு நகர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குள் புகுந்த சிலர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 16 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்தனர்; அவர்களில் 2 பேர் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆவர். அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள், அங்குள்ள கிறிஸ்தவர்களின் நிலங்களில் தங்கள் ஆடுகளை மேய விடுவதால் அடிக்கடி ஏற்படும் மோதலே இச்சம்பவத்திற்குக் காரணம்.
காவிரி: சென்னையில் சரத் உண்ணாவிரதம்!

காவிரி: சென்னையில் சரத் உண்ணாவிரதம்!

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் அவருடன் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-33; மதுரை-33; கோயம்புத்தூர்-31; திருச்சி-32; திருநெல்வேலி-31; திண்டுக்கல்-32; ஈரோடு-32; சேலம்-32; சிவகாசி-30; தஞ்சாவூர்-33; தூத்துக்குடி-32; திருப்பூர்-29; வேலூர்-32; ஊட்டி-19; கொடைக்கானல்-20; ஏற்காடு-26; ஏலகிரி-31; வேடந்தாங்கல்-33.