Short News

ஹாசினி குற்றவாளிக்கு தண்டனை என்ன: வருகிறது தீர்ப்பு!

ஹாசினி குற்றவாளிக்கு தண்டனை என்ன: வருகிறது தீர்ப்பு!

சிறுமி ஹாசினி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் 19ம் தேதி அறிவிக்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றாவாளி மீது ஏற்கெனவே தனது தாய் சரலாவை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு அதிபருக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்!

மாலத்தீவு அதிபருக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்!

அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக போர்கொடி தூக்கிய 12எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தற்போது அதனை திரும்ப பெற்றுள்ளது. இதன் மூலம் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 39 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எமர்ஜென்சி நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வலைதளத்தில் குளறுபடி!

ஜிஎஸ்டி வலைதளத்தில் குளறுபடி!

ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்யும் வலைதளத்தில் சில தொழிற்நுட்ப சிக்கல்கள் நீடிப்பதாக கூறப்படுகிறது. சிறு வணிகர்கள் தங்களது தொழில் தொடர்பான ஆவணங்களை (பைல்களை) பதிவேற்றம் செய்யும்போது பார்மேட் தவறு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் அதில் நீடிப்பதாக கூறப்படுகிறது.இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி?

உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி?

இந்திய மொபைல்சந்தையில் தற்சமயம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது, குறிப்பாக சியோமி ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் அன்லாக் செய்ய முடியும், ஆனால் மொபைலில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.