Short News

மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் காந்திமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது  
வாஜ்பாய் உடலுக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அஞ்சலி!

வாஜ்பாய் உடலுக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அஞ்சலி!

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று மாலை காலமானார். அவருடைய உடலுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் சிறந்த பேச்சாளராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் என பழனிச்சாமி அவருக்குப் புகழாரம் சூட்டினார்.
ஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா?

ஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா?

பாண்டியருக்கு வேப்பம்பூ மாலை போல, சேரருக்கு வஞ்சி மாலை போல, சோழர்களின் அணிகலன், ஆத்தி மாலை.ஆத்தி மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்த இடமே, தற்காலத்தில், ஆற்காடு என அழைக்கப்படுகிறது. நீதிநெறி தவறாமல் ஆண்ட மாமன்னன் மனுநீதி சோழன் ஆட்சி புரிந்த திருவாரூர் நகரமும், ஆர் எனும் ஆத்தி மரங்கள் நிறைந்த சோலை வனமாகத் திகழ்ந்த இடமாக இருந்ததால், ஆரூர் என்று இன்றும் வழங்கப்படுகிறது.

இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையில் வழக்கமான வெப்பம் இருந்தது. காலை 8.20 மணிக்கு 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று மேகக் கூட்டங்களுடன் நன்றாகவே வெப்பம் இருக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:57, மறைவு: மாலை 06:29; சந்திர உதயம்: காலை 11:20, மறைவு: இரவு 11:21.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more