Short News

செயின் பறிப்பில் இருந்து தப்பிக்க பலே ஐடியா

செயின் பறிப்பில் இருந்து தப்பிக்க பலே ஐடியா

தமிழகம் முழுவதும் செயின் பறிப்பு திருடர்கள் அதிகரித்து விட்டனர். நகை பறிப்பு கொள்ளையர்களிடம் இருந்து பெண்கள் தங்களையும், நகைகளையும் பாதுகாக்க ஒரு பெண் கொடுத்த ஐடியா வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில், செயின் பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பெண்கள் கழுத்தில் கர்ச்சிப் கட்டிக்கொள்ளுங்கள் என்று அந்த பெண் ஐடியா கொடுத்துள்ளார்  
சிறிய கார் மார்க்கெட்டில் 2வது இடத்தை பிடித்த டாடா டியாகோ!

சிறிய கார் மார்க்கெட்டில் 2வது இடத்தை பிடித்த டாடா டியாகோ!

டாடா டியாகோ கார் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சிறிய கார் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 23,100 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிறிய கார் மார்க்கெட்டில் டாடா டியாகோ கார் மாருதி ஆல்ட்டோ காருக்கு அடுத்த இடத்திற்கு முன்னேறி இருக்கிறது
ஒரே மாதத்தில் நல் ஆரோக்கியத்தை வழங்கும் வாழை பழம்!

ஒரே மாதத்தில் நல் ஆரோக்கியத்தை வழங்கும் வாழை பழம்!

தினமும் இரண்டு வாழை பழம் சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் நல்ல ஆரோக்கியம் சாத்தியமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைபர், விட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த வாழை பழம் பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது. மலச்சிக்கல் மட்டுமல்லாது உடல் பலகீனம் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு வாழை பழம் நல்ல தீர்வாக இருக்கும்.
குறைந்த விலை டுகாட்டி மான்ஸ்டர் 797!

குறைந்த விலை டுகாட்டி மான்ஸ்டர் 797!

டுகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள குறைந்த விலை மான்ஸ்டர் ரக பைக் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் 400 சிசி பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதற்கு அதிகமான திறன் உடைய பைக் வாங்க வேண்டும் என நினைத்தால் டுகாட்டி மான்ஸ்டர் 797 வாங்கலாம்.. இதன் விலை விலை டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 8.5 லட்சம். இது தான் டுகாட்டி பைக்குகளில் குறைந்த விலை பைக் என சொல்லப்படுகிறது.