Short News

கர்நாடகாவில் இன்று இரவுக்குள் ஆளுநரின் முடிவு அறிவிப்பு!

கர்நாடகாவில் இன்று இரவுக்குள் ஆளுநரின் முடிவு அறிவிப்பு!

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் பாஜக வென்றாலும் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இந்நிலையில், ஆளுநர் வஜுபாய் வாலா இன்று இரவு எப்போது வேண்டுமானாலும், பாஜக அல்லது, காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு அழைப்புவிடுப்பார். ஒருவேளை பாஜகவை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தால் ராஜ்பவன் எதிரே போராட்டம் வெடிக்கும் என தெரிகிறது. இதனால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நீடித்து வருகிறது.    
பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு: ரஜினி!

பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு: ரஜினி!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர்உயிரிந்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டுள்ளனர். நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி!

போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடரும் பலி எண்ணிக்கை தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

டி20லீக் பைனல்ஸில் முதலில் நுழைவது யார் என்று இன்று தெரியும்!

விறுவிறுப்பாக நடந்து வரும் டி-20 லீக் போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றது.இன்றைய முதல் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் 2வது இடத்தில் இருக்கும் சென்னையும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு நேடியாக முன்னேறும். இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது.