Short News

புதிதாக கதை சொல்லும் விவேக்!

புதிதாக கதை சொல்லும் விவேக்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவை தான் பார்க்கவே இல்லை என கூறிருக்கிறார் விவேக் ஜெயராமன். முன்னாள் நிதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் முன்னிலையில் ஆஜரான விவேக் இத்தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

நடிகர் விஜய் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விசுவாசம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அமெரிக்காவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

நேபாளத்தில் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என உருவாகியுள்ளது. இதில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்- சென்டர் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றது. தற்போது, இந்த கூட்டணி ஒன்றாக இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு கடிதம் எழுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அந்த 6 வயது சிறுமி. புளூட்டோவை மீண்டும் கோள் என்று அறிவியுங்கள் என அந்த சிறுமி நாசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நாசா நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய சுவாரஸ்யங்களை கொண்டிருப்பதுதான் புளூட்டோ என கூறியுள்ளது.