Short News

வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்!

வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்!

சென்னை வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இதுவரை 6 முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் 7வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

ஜிஎஸ்டி வலைதளத்தில் குளறுபடி!

ஜிஎஸ்டி வலைதளத்தில் குளறுபடி!

ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்யும் வலைதளத்தில் சில தொழிற்நுட்ப சிக்கல்கள் நீடிப்பதாக கூறப்படுகிறது. சிறு வணிகர்கள் தங்களது தொழில் தொடர்பான ஆவணங்களை (பைல்களை) பதிவேற்றம் செய்யும்போது பார்மேட் தவறு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் அதில் நீடிப்பதாக கூறப்படுகிறது.இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி?

உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி?

இந்திய மொபைல்சந்தையில் தற்சமயம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது, குறிப்பாக சியோமி ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் அன்லாக் செய்ய முடியும், ஆனால் மொபைலில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.

புவனேஷ்வர்குமார் ஆரம்பித்தது எப்படி?

புவனேஷ்வர்குமார் ஆரம்பித்தது எப்படி?

இந்திய அணியில் தற்போது அசைக்க முடியாது பந்துவீச்சாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் உ.பி மாநிலத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார்.2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய புவனேஷ் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.சமீபத்தில் முடிந்த ஐபிஎஸ் போட்டியைஅவருக்கு சாதகமாக மாறிய புவனேஷ் 2017 ஆம் ஆண்டிற்கான பர்பிள் தொப்பியையும் தனதாகினார்.