Short News

விழுப்புரம் மாவட்ட பதிவாளர் வீட்டில் ரெய்டு!

விழுப்புரம் மாவட்ட பதிவாளர் வீட்டில் ரெய்டு!

கடலூரில் விழுப்புரம் மாவட்ட சர் பதிவாளர் குமரேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து 7 மணி நேரம் நடத்திய சோதனை சற்றுமுன் முடிந்தது. இதில், அவர் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கிய முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடியவிரைவில் விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஓவியா 'ஜகா' வாங்கிய படத்தில் ஆத்மிகா!

ஓவியா 'ஜகா' வாங்கிய படத்தில் ஆத்மிகா!

டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் ஓவியா என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து ஓவியா 'ஜகா' வாங்கி விட்டார். இதையடுத்து, மீசைய முறுக்கு படத்தின் கதாநாயகியாக தற்போது ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சிபிசிஐடி போலீஸ் சீல் வைத்தது. அவரது வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது
எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

செய்தியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது எஸ்வி சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், எஸ்வி சேகர் 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.