Short News

சென்னை ஹாட் சிப்ஸ் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

சென்னை ஹாட் சிப்ஸ் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல ஹாட் சிப்ஸ் உணவகத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஹாட் சிப்ஸ் அலுவலகத்தில் 15 ஐடி அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ்: ஒலிம்பிக் சேனல்!

எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ்: ஒலிம்பிக் சேனல்!

இளம் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க இருப்பதாக ஒலிம்பிக் சேனலில் சிஇஓ இயானிஸ் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் எலக்ட்ரானி  மோகத்தை கணக்கில் கொண்டு இதனை  செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்து  இருக்கிறார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாகிச்சூடு!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாகிச்சூடு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி எல்லை பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 3பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த பகுதிகளில் இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்து வருவதாக தகவல்!
அஜித்-அர்ஜூன் கூட்டணி: வெற்றி பெறுமா.!

அஜித்-அர்ஜூன் கூட்டணி: வெற்றி பெறுமா.!

மங்காதா படத்தில் அஜித் மற்றும் அர்ஜூன் கூட்டணிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இந்த படத்தில் அர்ஜூன் தற்போது சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக அர்ஜூன் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு இதுவரை படக்குழு பதில் கூறவில்லை.