போலி ஐடி அதிகாரிக்கு பிப்.26 வரை நீதிமன்றக் காவல்!
தமிழகம்
- 2 month, 7 days ago
சென்னை தி.நகர் ஜெ.தீபா வீட்டில் போலி வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து கைவரிசை காட்டிய பிரபாகரன் இன்று காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் மீது ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 26ம் தேதி வரை பிரபாகரனை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.