Short News

போலி வருமான வரித்துறை அதிகாரி வழக்கில் முன் ஜாமீன் பெற மாதவன் முயற்சி?

போலி வருமான வரித்துறை அதிகாரி வழக்கில் முன் ஜாமீன் பெற மாதவன் முயற்சி?

போலி வருமானவரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமாகிய ஜெ.தீபாவின் கணவர் மாதவன் முன் ஜாமீன் பெற முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போலி வருமான வரித்துறை அதிகாரி தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள தீபாவின் கணவர் மாதவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட தினம்.1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21ல் இறந்ததாக  அதிகாரபூர்வமாக அறிவித்த தினம்.1984- எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.1950 - இசுரேல் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.1639-புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.,
என்ன கொடுமை: நஸ்ரியா தம்பியும் ஹீரோவா?

என்ன கொடுமை: நஸ்ரியா தம்பியும் ஹீரோவா?

'நேரம்' படம் தமிழில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகை நஸ்ரியா, நடிக்க வந்த சில நாட்களில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். பின்னர், சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ப்ரித்விராஜ் நடிக்கும் மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நஸ்ரியாவின் தம்பி நவீன் நஸீம், ஜான்பால் ஜார்ஜின் இயக்கி வரும் அம்பிளி படத்தில் நடிகராகிவிட்டார்.
மகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்!

மகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்!

பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தனது மகள் வயது இளம்பெண்ணை இன்று முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.52 வயதாகும் அவருக்கு கவுஹாத்தியைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று மும்பை அலிபாக்கில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.