Short News

நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய ஜெ.தீபா!

நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய ஜெ.தீபா!

நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெ.தீபா கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டம் முடிந்ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. ஜெ.தீபா கட்சியினரின் இந்த நடவடிக்கையால் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 
ஐடிபிஐ. வங்கி மோசடி: சிவசங்கரன் வீட்டில் சிபிஐ ரெய்டு!

ஐடிபிஐ. வங்கி மோசடி: சிவசங்கரன் வீட்டில் சிபிஐ ரெய்டு!

ஆக்‌ஷெல் சன்ஷைன் நிறுவனர் சிவசங்கரன் சமீபத்தில் ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி மோசடி செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக சிவசங்கரன் மீது குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இன்று அவரது வீடு, அலுவலம் மற்றும் அவருக்கு சொந்தமான 50 இடங்களில் 8 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
சிறிய கார் மார்க்கெட்டில் 2வது இடத்தை பிடித்த டாடா டியாகோ!

சிறிய கார் மார்க்கெட்டில் 2வது இடத்தை பிடித்த டாடா டியாகோ!

டாடா டியாகோ கார் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சிறிய கார் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 23,100 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிறிய கார் மார்க்கெட்டில் டாடா டியாகோ கார் மாருதி ஆல்ட்டோ காருக்கு அடுத்த இடத்திற்கு முன்னேறி இருக்கிறது
ஒரே மாதத்தில் நல் ஆரோக்கியத்தை வழங்கும் வாழை பழம்!

ஒரே மாதத்தில் நல் ஆரோக்கியத்தை வழங்கும் வாழை பழம்!

தினமும் இரண்டு வாழை பழம் சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் நல்ல ஆரோக்கியம் சாத்தியமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைபர், விட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த வாழை பழம் பல நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது. மலச்சிக்கல் மட்டுமல்லாது உடல் பலகீனம் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு வாழை பழம் நல்ல தீர்வாக இருக்கும்.