Short News

சுகாதாரத்துறை செயலாளர் மறுப்பு: தொடரும் ஜெ.கைரேகை சர்ச்சை!

சுகாதாரத்துறை செயலாளர் மறுப்பு: தொடரும் ஜெ.கைரேகை சர்ச்சை!

சுகாதார செயலாளர் கூறியதன் பேரில் ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகை பெற்றேன் என்று ஆணையத்தில் தெரிவிக்கவில்லை என மருத்துவர் பாலாஜி என்னிடம் கூறினார் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால், சுகாதார செயலாளர் கூறியதன் பேரில் ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகை பெற்றேன் என்று டாக்டர் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளர்.
பங்குச் சந்தைகள் சரிவுடனேயே நிறைவு!

பங்குச் சந்தைகள் சரிவுடனேயே நிறைவு!

வார வர்த்தகத்தின் 3ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 115.37 புள்ளிகள் குறைந்து 34,501.30 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 43.80 புள்ளிகள் சரிந்து 10,570.60 புள்ளிகளாக இருந்தது.
'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீசன் 2வில் விஷால்?

'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீசன் 2வில் விஷால்?

'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்ள மணப்பெண் தேடிய விவகாரம் சர்ச்சையில் முடிந்தது. இந்நிலையில், 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீசன் 2வில் நான் கலந்துக்கப் போறேன்னு என்று புரளியைக் கிளப்பி விடாதீங்க. நடிகர் சங்கம், சினிமா தயாரிப்பாளர் சங்கம்னு இரண்டு பக்கமும் பெண்ட கழட்டுறாங்க ." என்றார்
தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கம் இன்று காலை விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2,998 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,984 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,470க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.