Short News

கட்சி பெயர் அறிவிப்பு குறித்து கமல் முக்கிய ஆலோசனை!

கட்சி பெயர் அறிவிப்பு குறித்து கமல் முக்கிய ஆலோசனை!

நடிகர் கமல் வரும் 21ம் தேதி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ள நிலையில்,சென்னை, ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வழக்கறிஞர்கள், நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில், அரசியல்  பயண திட்டம், கட்சி பெயர் அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் புதிய வரி சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியது.மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனத்தை தெரிவித்த நிலையில், தற்போது பிரபல தொழிலதிபர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமேசான் அதிபர் ஜெஃப் பெஸாஸுக்கு அடுத்தப்படியாக பில்கேட்ஸ் இந்த வரி சீர்த்திருத்தை விமர்சித்துள்ளது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டவுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்களுக்கு போலீஸார் இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குழந்தை என்றும் பாராமல் ஹாசினியை கொடூரமாக கொன்ற குற்றத்துக்காக இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்கின்றனர். தஷ்வந்தை நீதிமன்றத வளாகத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜேம்ஸ் பாண்ட் படம்: கிறிஸ்டோபர் நோலன் மறுப்பு!

ஜேம்ஸ் பாண்ட் படம்: கிறிஸ்டோபர் நோலன் மறுப்பு!

ஜேம்ஸ் பாண்ட்டின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜேம்ஸ் பாண்ட் சிரிஸின் புதிய பாகத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கிறிஸ்டோபர் நோலன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.