Short News

2ஆவது நாளாக கேஸ் லாரிகள் ஸ்டிரைக்!

2ஆவது நாளாக கேஸ் லாரிகள் ஸ்டிரைக்!

தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 2ஆவது நாளாக நீடிக்கிறது. டெண்டர் ஒப்பந்தங்களை மண்டல அளவில் நடத்தக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக சுமார் 10,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாளுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்படுகிறது.
'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். மேலும், என் கட்சியின் கட்டமைப்பு என்னுடன் முடிவது அல்ல, குறைந்தது 3 அல்லது 4 தலைமுறை தாங்கும் என பேசியுள்ளார். மேலும், என்னுடைய கட்சி பேச்சை குறைத்து செயலில் இறங்கும் எனவும் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். 
கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவில் ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதை கவுரவமாக கருதுகிறேன் என்று கமலின் 'மக்கள் நீதி மய்ய' அரசியல் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜனநாயகத்தை கமல் காப்பார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.