Short News

விஜயேந்திரர் மீது வழக்கு பதிய கோரிய மனு... போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!

விஜயேந்திரர் மீது வழக்கு பதிய கோரிய மனு... போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!

நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மீது வழக்கு பதியக் கோரி தொடரப்பட்ட மனு மீது போலீஸ் பதில் தர ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. த.பெ.தி.க நிர்வாகி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சுற்றில் மோதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

இறுதிச்சுற்றில் மோதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.
டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

டெல்லியில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை!

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின்  போராட்ட வாழ்க்கை

விஷமான ரத்தம்! அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் போராட்ட வாழ்க்கை

ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று வயது வித்யாசத்தில் உடன்பிறப்புகளுடன் இருப்பவர்கள் எல்லாரும் இந்த நிகழ்வை கடந்து வந்திருப்பார்கள். இதுல யாரு பெருசு?..... என்று கேட்கப்படும் கேள்விகள் மற்றும் இளையவரை மூத்தவர் என்றும் மூத்தவரை இளையவர் என்றும் சொல்வார்கள் .

ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.