Short News

தூக்கில் தொங்கிய மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்!

தூக்கில் தொங்கிய மதுரை அரசு மருத்துவமனை ஊழியர்!

மதுரை ராஜாஜி மருத்துவமனை துப்புரவு பணியாளர் வைரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்த நிறுவன மேலாளர் அவரை தரக்குறைவாக பேசி திட்டியதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு காரணமாக இருந்த அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனி தேன் சாப்பிடறதுக்கு முன்னாடி தேன்மெழுகை சாப்பிடுங்க... ஏன் தெரியுமா?

இனி தேன் சாப்பிடறதுக்கு முன்னாடி தேன்மெழுகை சாப்பிடுங்க... ஏன் தெரியுமா?

தேன் மெழுகு என்பது என்ன தெரியுமா?... அது பெண் தேனீக்கள் அதிக தூரம் தேனெடுக்கச் செல்லும்போது, அதனுடைய வயிற்றில் சுரக்கும் ஒருவகையான திரவம் தான் அது. தேனைவிட இதில் அதிக நன்மைகள் நிறைந்திருக்கின்றன. இந்த தேன் மெழுகு தேன் கூட்டுக்குள் தேனீக்களால் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். இதில் பல வகை உண்டு. சருமம், உதடு, கல்லீரல் ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஆற்றல் வாய்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1300 டன் அமிலம் வெளியேற்றம்!

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1300 டன் அமிலம் வெளியேற்றம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1300 டன் கந்தக அமிலம் லாரி மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கசிவு தொடர்பான கேள்விக்கு பதில் அந்த மாவட்ட ஆட்சியர் கசிவு கொள்கலனில் குறைந்து அளவு மட்டுமே கந்தக அமிலம் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
கிராமபுற மருத்துவ சேவையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர்!

கிராமபுற மருத்துவ சேவையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர்!

கிராமபுற மருத்துவ சேவையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கிராமபுற மருத்துவ சேவை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் இந்த துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை இருப்பதாக கூறினார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more