Short News

சக ஊழியர் மர்ம மரணம்: செவிலியர்கள் போராட்டம்

சக ஊழியர் மர்ம மரணம்: செவிலியர்கள் போராட்டம்

வெள்ளங்கோயிலில் பணியாற்றிய மணிமாலா என்ற செவிலியர் மர்மான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், செவிலியர் மணிமாலா மர்ம மரணத்தை கண்டித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணியை புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விளம்பரங்களை அதிரடியாக முடக்கும் கூகுள் க்ரோம்!

விளம்பரங்களை அதிரடியாக முடக்கும் கூகுள் க்ரோம்!

தனது பிரௌசரான கூகுள் க்ரோமில் இனி எரிச்சலுட்டும் விளம்பரங்கள் வராது என கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது. நல்ல விளம்பரங்கள் எது, மோசமான விளம்பரங்கள் எது, என்பதை கண்டறிந்து கூகுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களை தொடர்ந்து கூகுல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
சாய் பல்லவியின் ‘கரு’ இசை வெளியீடு தெரியுமா?

சாய் பல்லவியின் ‘கரு’ இசை வெளியீடு தெரியுமா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முதல் முறையாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்கும் ‘கரு' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, கரு என்ற படத்தலைப்பை லைக்கா நிறுவனம் பயன்படுத்தலாம் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
ஸ்டாலின், ஓ.பி.எஸ், வைகோ கூட்டு பேச்சு!

ஸ்டாலின், ஓ.பி.எஸ், வைகோ கூட்டு பேச்சு!

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தின் உணவு இடைவேளையின் போது ஒன்றாக அமர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலின், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், வைகோ மற்றும் வேல்முருகன் உரையாடியுள்ளனர். இதை நெட்டிசன்கள் கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்