Short News

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவருக்கு 3 நாள் போலீஸ் காவல்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவருக்கு 3 நாள் போலீஸ் காவல்!

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புக்கு உளவு பார்த்ததாக புகாரில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்சார் மீரான், நேற்று முன்தினம் கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். தற்போது மீரானை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது பூவிருந்தவல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றம்.
மனைவியின் ஆசையை ஒன் மோர் சிக்ஸ் அடித்து நிறைவேற்றிய தோனி!

மனைவியின் ஆசையை ஒன் மோர் சிக்ஸ் அடித்து நிறைவேற்றிய தோனி!

நேற்று பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையே பரபரப்பாக நடந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது தோனியிடம் அவரது மனைவி சாக்ஷி இன்னொரு சிக்ஸ் அடிக்கும் படி கேட்டுள்ளார். அதற்கு அடுத்த ஓவரில் தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைக்கும் போது அவர் அதை சிக்ஸாக மாற்றி தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
சென்னை அணி முதியோர் இல்லமா?  பதிலடி!

சென்னை அணி முதியோர் இல்லமா? பதிலடி!

நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த டி20லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றிபெற்றது. இதில் தோனி 7 சிக்ஸர்கள் அடித்து நேற்று வானவேடிக்கை காட்டினார். இதை வைத்து இணையத்தில் நிறைய மீம்ஸ் வைரலாகி வருகிறது. இதில் ஒருவர் சென்னை அணியில் வயதான வீரர்கள் இருப்பதை வைத்து முதியோர் இல்லமா? என்று கேள்விக்கு மீம் போட்டு பெங்களூரு ரசிகர்களை கலாய்த்து இருக்கிறார்.
இன்றைய (ஏப்ரல் 26) கரன்சி நிலவரம்!

இன்றைய (ஏப்ரல் 26) கரன்சி நிலவரம்!

அமெரிக்கா(டாலர்)-ரூ.66.9177, ஐரோப்பா(யூரோ) -ரூ.81.3052., பிரிட்டன்(பவுண்டு)- ரூ.93.1005 ஆஸ்திரேலியா(டாலர்) -ரூ.50.525, சிங்கப்பூர்(டாலர்)-ரூ.50.3649, ஹாங்காங்(டாலர்)- ரூ.8.518, மலேசியா(ரிங்கட்)-ரூ.17.093பக்ரைன்(தினார்) 177.128, குவைத்(தினார்)-ரூ.221.9372, ஓமன்(ரியால்)-ரூ.173.8339,கத்தார்(ரியால்)-ரூ.18.3395 சவுதி(ரியால்)-ரூ.17.8031, தாய்லாந்து(பாத்)- ரூ.2.1196.,