Short News

இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

ஹேவிளம்பி ஆண்டு, மாசி 1; பிறை: தேய்பிறை; திதி: திரயோதசி திதி இரவு மணி 11.29 வரை பிறகு சதுர்தசி; நட்சத்திரம்: உத்திராட நட்சத்திரம் மறுநாள் அதிகாலை மணி 5.45 வரை பிறகு திருவோணம்; யோகம்: சித்தயோகம்; சூலம்: வடக்கு; ராகுகாலம்: மாலை 03:00 முதல் 04:30 வரை; எமகண்டம்: காலை 09:00 முதல் 10:30 வரை; நல்ல நேரம்: காலை 08:00-09:00; மாலை 07:00-08:00
கலாம் படித்த பள்ளி முன் நின்று கையசைத்த கமல்!

கலாம் படித்த பள்ளி முன் நின்று கையசைத்த கமல்!

இன்று தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், சற்றுமுன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு வந்தார். பள்ளிக்குள் நுழைய அவருக்கு அரசு தடை விதித்துள்ளதால், அந்தப் பள்ளியின் வாசலில் நின்று தன் காருக்குள் இருந்தவாறே பள்ளி மாணவ-மாணவிகளை நோக்கி சுமார் 2 நிமிடங்கள் கையசைத்துக் கொண்டிருந்தார் கமல்.
கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று தொடங்கியுள்ளது. கலாமின் வீட்டிற்கு இன்று காலை சென்ற கமல், அங்கு கலாமின் உறவினர்களுடன் உரையாடினார். பின்னர் கலாமின் வீட்டிலேயே கமல் தன் காலை உணவையும் சாப்பிட்டார்.
கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

இன்று தன் அரசியல் பயணத்தை அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவர் கலாம் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களை சந்திக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.