Short News

இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, சித்திரை 3; பிறை: தேய்பிறை; திதி: அமாவாசை காலை மணி 7.57 வரை, பிறகு பிரதமை; நட்சத்திரம்: அசுவினி அதிகாலை மணி 4.09 வரை, பிறகு பரணி; யோகம்: சித்தயோகம்; சூலம்: கிழக்கு; ராகுகாலம்: காலை 07:30 முதல் 09:00 வரை; எமகண்டம்: காலை 10:30 முதல் பகல் 12:00 வரை; நல்ல நேரம்: காலை 06:30-07:30; மாலை 04:30-05:30
விரைவில் ஜப்பானில் அறிமுகமாகும்  அதிவேக ஏரோடிரையின்!

விரைவில் ஜப்பானில் அறிமுகமாகும் அதிவேக ஏரோடிரையின்!

இந்தியாவில் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து நிலையில் சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் அடுத்த கட்டமாக ஏரோடிரையின் என்ற புதிய ரக ரயிலை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஏரோடிரையின் என்ற புதிய ரக ரயில் சுமார் 400-500 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ரயில் ஒரு சதவீதம் கூட காற்றை மாசுபடுத்தாமல் செயல்படக்கூடியது எனவும் கூறப்படுகிறது. 
டாட்டா காட்டிவிட்டு சீனா புறப்பட்டார் மோடி!

டாட்டா காட்டிவிட்டு சீனா புறப்பட்டார் மோடி!

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி. அந்நாட்டில் வுஹான் நகரில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். இந்த பயணத்தில் டோக்லாம் எல்லையில் சீனா-இந்தியப் படைகளுக்கும் இடையே 73 நாட்களாக நீடித்து எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது
நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர் !

நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர் !

உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவின் தேர்வுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், உச்சநீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வார இறுதியில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.