Short News

சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா.. மத்திய அரசு அறிவிப்பு

சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா.. மத்திய அரசு அறிவிப்பு

சென்னையில் பிப்.17ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்ய வேண்டும். தாம்பரம், சாலிகிராமம், அமைந்தகரை பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களில் இந்த மேளா நடைபெறும். இந்த அலுவலகங்கள் பிப்.17ல் செயல்படும். இதற்காக http://www.passportindia.gov.in இல் பதிவு செய்ய வேண்டும். இதில் கட்டணம் செலுத்தி பதிவு எண், நேரம் பெற வேண்டும்.

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா டி20: இந்தியா 144/4

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா டி20: இந்தியா 144/4

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற தென் ஆஃப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா அணி 16.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் விளையாடி வருகிறது. டோனி 24 ரன்களுடனும், மனிஷ்பாண்டே 64 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். மேலும், என் கட்சியின் கட்டமைப்பு என்னுடன் முடிவது அல்ல, குறைந்தது 3 அல்லது 4 தலைமுறை தாங்கும் என பேசியுள்ளார். மேலும், என்னுடைய கட்சி பேச்சை குறைத்து செயலில் இறங்கும் எனவும் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். 
கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவில் ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.